புதுச்சேரி அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ பாஸ்கர், பாஜகவில் இணையவுள்ளார். இதற்காக அவர் நேற்று முன்தினமட (நவ., 20) பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை, மாநிலத் தலைவர் வி.பி.ராமலிங்கத்துடன் சந்தித்தார். முதலியார்பேட்டை தொகுதியில் இருந்து 2 முறை எம்எல்ஏவாக இருந்த பாஸ்கர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்தார். அவர் விரைவில் பாஜகவில் இணைந்து, அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.