கோவா மாநிலத்தின் முன்னாள் எம்எல்ஏ லாவூ மாமலேதர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்காம் நகரில் கதேபஜார் மட்டுகட்டாவில் உள்ள ஸ்ரீனிவாசா குடியிருப்பு வீட்டிற்கு அருகில் ஆட்டோ ஓட்டுநருக்கும் லாவூவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக வெடித்தது. இதில் படுகாயமடைந்த லாவூ மாமலேதர் உயிரிழந்தார். இதையடுத்து, ஆட்டோ டிராவர் கைது செய்யப்பட்டுள்ளார்.