அதிமுக மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். எஸ்பி வேலுமணி ஆதரவு மாவட்டச் செயலாளர்களுடன் சேர்த்து பெஞ்சமினின் பதவியையும் இபிஎஸ் அண்மையில் பறித்திருந்தார். இதனால் அதிருப்தியடைந்த பெஞ்சமின், மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருந்த நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.