கேரளா: மாவேலிக்கரா முன்னாள் எம்.எல்.ஏ.வும் காங்கிரஸ் மூத்த தலைவருமான எம்.முரளி (73) இன்று (பிப்., 05) காலமானார். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. 1969ஆம் ஆண்டு கேரள மாணவர் சங்கத்தின் (கே.எஸ்.யு) உறுப்பினராக பொது வாழ்க்கையில் நுழைந்தார். காங்கிரஸில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ள இவர், 1991, 1996, 2001 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் மாவேலிக்கரை தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.