திமுக Ex.அமைச்சர் பொன்முடி கடந்த 2025-ம் ஆண்டில் சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை கண்டித்து, சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், தனது பேச்சு தொடர்பாக பொன்முடி பொதுவெளியில் மன்னிப்பு கோரியதை ஏற்று கொண்ட கவுன்சிலர் உமா, பொன்முடியின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் வழக்கை திரும்ப பெற்றார். இதைத்தொடர்ந்து, வழக்கில் இருந்து பொன்முடியை முழுமையாக விடுவித்து நீதிமன்றம் இன்று (நவ.04) உத்தரவிட்டுள்ளது.