வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவுக்கு சுவாச பிரச்சனை அதிகரித்ததால் கடந்த வாரம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, கார்பன் டை ஆக்ஸைடு அளவும் உயர்ந்தது. இதையடுத்து நுரையீரல் மற்றும் முக்கிய உறுப்புகளுக்கு ஓய்வு அளிக்கும் நோக்கில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.