வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான பேகம் கலிதா ஜியா(80) உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அவர், கடந்த மாதம் 23ஆம் தேதி முதல் டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 11ஆம் தேதி முதல் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.