சென்னை விமான நிலையத்தின் நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் ராணுவ வீரர் காந்தி கன்னியப்பன் (57) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறைச் சேர்ந்த இவர், கடந்த 7 ஆண்டுகளாக தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் இங்குப் பணியாற்றி வந்தார். நேற்று இரவு இரண்டாம் தளத்தில் பணியில் இருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.