தமிழக சட்டமன்றத் தேர்தல் முன் அதிமுகக்கு அதிர்ச்சியாக, முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இவர் கடந்த 2024 மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக களமிறங்கி 3வது இடம் பிடித்திருந்தார். அவர் விலகியது, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தேர்தல் திட்டங்களுக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.