அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. காலமானார்

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ். அமர்நாத் (68) உடல் நலக்குறைவால் காலமானார். இவர் மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்வானார். கடந்த 1991 - 1996 வரை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த அமர்நாத் அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவர் மறைவுக்கு அதிமுகவினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி