அதிமுக முன்னாள் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் வின்சென்ட் ஆகியோர் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இன்று (மே 28) இணைந்தனர். சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டு தற்போது இரு அணிகள் ஒன்றிணைந்து வருகின்றன. இந்த சூழலில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தியால் முக்கிய நிர்வாகிகள் பலரும் தவெகவுக்கு படையெடுத்து வருகின்றனர்.