அதிமுக முன்னாள் எம்எல்ஏ தவெகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், வடசென்னையின் மூத்த அரசியல் தலைவருமான வி.எஸ்.பாபு தவெகவில் இன்று (பிப்., 07) இணைந்தார். சென்னையில் உள்ள இல்லத்தில் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த அவர், கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்த பின், பலரும் தவெகவுக்கு தாவி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி