அதிமுக முன்னாள் அமைச்சர் ந.சுப்பிரமணியன் தவெகவில் இணைந்தார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ந.சுப்பிரமணியன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 2006-2011-ல் அதிமுக எம்எல்ஏவாகவும், 2011-2016-ல் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. ந.சுப்பிரமணியன், அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி