ஆப்கானிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷபூர் ஜத்ரான் காலமானார்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஷபூர் ஜத்ரான் (38), அரிய வகை நோய் பாதிப்பால் இன்று (ஜூலை 7) காலமானார். நோய் எதிர்ப்பு மண்டல குறைபாட்டால் உடல் உறுப்புகள் செயலிழந்த அவர், கடந்த ஓராண்டாக டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு கிரிக்கெட் உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆப்கன் வீரர்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி