நீலகிரி கூடலூரில் 28 நாட்களுக்குப் பிறகு கூண்டில் சிக்கிய புலி

கூடலூர் அருகே இருவரைக் கொன்ற ஆட்கொல்லிப் புலியைப் பிடிக்க 3 அதிநவீன டிரோன்கள், 70-க்கும் மேற்பட்ட கேமராக்கள், கும்கி யானைகள் மற்றும் கூண்டுகளுடன் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில், 28 நாட்களுக்குப் பிறகு சில்வர் கிளவுட் பகுதியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் புலி சிக்கியது. பிடிபட்டது 2 பேரைக் கொன்ற அதே ஆட்கொல்லிப் புலிதானா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி

✕
✕