மேற்கு வங்கத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை இழந்து, சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக அரசு அமைந்துள்ளது. இந்நிலையில், கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தின் முன் மம்தா பானர்ஜியால் வடிவமைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய கால்பந்து வீரர் சிற்பத்தைப் புதிய அரசு அகற்றியுள்ளது. இடுப்புக்கு மேல் பந்து வடிவம் கொண்ட இந்த சிற்பத்தை அகற்றுவோம் என பாஜக தேர்தல் பரப்புரையில் வாக்குறுதி அளித்திருந்தது.