உணவு மானியம் இனி டிஜிட்டல் நாணயமாக: மத்திய அரசின் புதிய முயற்சி

பொது விநியோகத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, மத்திய அரசு புதுச்சேரியில் 'டிஜிட்டல் உணவு நாணய' (CBDC) முன்னோட்டத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் உணவு மானியம் நேரடியாகப் பயனாளிகளின் டிஜிட்டல் பணப்பைகளுக்கு மாற்றப்படும், அதை நியாய விலைக் கடைகளில் டிஜிட்டல் கூப்பன்களாகப் பயன்படுத்தலாம். இத்திட்டம் விரைவில் சண்டிகர் மற்றும் தாத்ரா நாகர் ஹவேலி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி