ஃபுட் பாய்சன்.. முதியோர் இல்லத்தில் 3 பேர் பலி

தென்காசி மாவட்டத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட உணவால் ஃபுட் பாய்சன் ஏற்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கீழபாட்டாக்குறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் அண்ணை முதியோர் இல்லத்தில் கடந்த 8ஆம் தேதி அசைவ உணவு வழங்கப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்டவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், 3 பேர் உயிரிழந்த நிலையில், 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி