வாஷிங் பவுடர் கலந்த உணவு.. 20 மாணவர்களுக்கு சிகிச்சை

பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவில் உப்பிற்குப் பதிலாக வாஷிங் பவுடர் கலக்கப்பட்டதால், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவில் உப்பு குறைவாக இருப்பதாக மாணவர்கள் கூறவே, உப்புக்கு பதிலாக வாஷிங் பவுடரை தவறுதலாக எடுத்து மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர். இதனை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. உடனே மீட்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

நன்றி: இந்தியாடுடே

தொடர்புடைய செய்தி

✕
✕