கோவை செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.என்.நேரு, தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்க உத்தரவிட்டார். ஆனால், மாநகராட்சியில் குப்பை அள்ளும் வண்டியில் உணவு கொண்டு வந்து விநியோகம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் காட்டுவதாகவும், கிருமிகள் மூலம் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.