தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை கோரி நிலுவையில் உள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும், அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் ரேசன் அட்டைகளை முழுமையாக விநியோகம் செய்ய உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளை தீவிரப்படுத்தி, தகுதியான நபர்களை கண்டறிந்து விரைந்து அட்டைகளை வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாக புதிய ரேசன் கார்டுகளுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான பொதுமக்கள் விரைவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:News18