காபி செடிகளில் பூத்துள்ள பூக்கள் கோடைமழை எதிர்பார்த்து விவசாயிகள்

கூடலுார், பந்தலுார் பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக காபி விவசாயம் அதிகரித்துள்ளது. ‘அரபிகா’, ‘ரொபஸ்டா’ வகைகள் 16,500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன; இதில் 10,000 ஏக்கர் ரொபஸ்டா. மார்ச் முதல் வாரத்தில் பூக்கும் காபிக்கு, 15 நாட்களுக்குள் 25 மி.மீ. கோடைமழை அவசியம். கடந்த வார மழையால் பல இடங்களில் 50%க்கும் மேல் பூத்துள்ளது. மழை குறைந்தால் பூக்கள் கருகி மகசூல் பாதிப்பு ஏற்படும் என காபி வாரிய அலுவலர் ஜெயராமன் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி