ஸ்பெயினில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது. வலென்சியாவில், செவ்வாய் இரவு முதல் வெள்ளிக்கிழமை வரை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பொதுமக்கள் தங்களின் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். வீதிகளில் பெருக்கெடுத்த வெள்ளநீரில் 5,000-க்கும் மேற்பட்ட கார்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டு மிதக்கின்றன.