கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று (நவ.5) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அருவியில் நீர்வரத்து சீராகி இயல்பு நிலை திரும்பிய பின்னரே சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.