திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பாலாற்றில் அதிக நீர்வரத்து காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நீர்வளத்துறை எச்சரித்துள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்களம் அணை நிரம்பி வழிவதால், தமிழக-ஆந்திரா எல்லைப் பகுதியான பெரும்பள்ளம் தடுப்பணையிலிருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் பாலாற்றில் வந்து கொண்டிருக்கிறது. தொடர் மழையால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.