லண்டனில் இருந்து ஹைதராபாத் வந்த விமானம் நாக்பூரில் தரையிறக்கம்

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் வந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், மோசமான வானிலை காரணமாக இன்று (பிப்., 24) மராட்டிய மாநிலம் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த இந்த விமானம், ஹைதராபாத்தில் நிலவிய பலத்த காற்று மற்றும் மழையால் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டதால் நாக்பூரில் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. பயணிகள் மாற்று விமானம் மூலம் ஹைதராபாத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி