சென்னையில் இருந்து குவைத் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இன்று (ஆக.01) மாலை 4.05 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 185 பயணிகள் உள்ளிட்ட 191 பேருடன் புறப்பட்டு, ஓடுபாதையில் சென்றது. அப்போது விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். பிறகு இழுவை வண்டிகள் மூலம் ஓடுபாதையில் நின்ற விமானம் புறப்பட்ட இடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பின்னர் இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு தாமதமாக புறப்பட்டு சென்றது.