விமானப் பணிப்பெண் கொடூரமான முறையில் படுகொலை

மத்தியப் பிரதேசம்-மகாராஷ்டிர எல்லையில் உள்ள போண்டாரானி கிராமத்தில், வைங்கங்கா ஆற்றங்கரையில் வர்ஷா துர்கார் (35) என்ற விமானப் பணிப்பெண் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிக் கொல்லப்பட்டார். இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு சமர் சையத் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த வர்ஷா, தனது சிறுவயது நண்பருடன் வெளியே சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொள்ளைச் சம்பவத்தைத் தடுக்க முயன்றதால் வர்ஷா கொல்லப்பட்டதாக நண்பர் கூறி வருகிறார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕