குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் இன்று (ஜூன் 12) பிற்பகல் லண்டன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ஒரு வீட்டின் மாடியிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோவில் திடீரென தாழ்வாக பறந்த விமானம் குடியிருப்பு பகுதியின் நடுவே விழுந்து வெடித்துச் சிதறியது. இந்த காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.