மீன்பிடி தடைக்காலம்: மீன்வரத்து 80% சரிந்து விலை இருமடங்கு உயர்வு!

தமிழகக் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இதனால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தப்பட்டு, மீன்வரத்து 80% சரிந்துள்ளது. நாட்டுப்படகுகள் மூலம் கிடைக்கும் 20% மீன்களே சந்தைக்கு வருவதால் பற்றாக்குறை ஏற்பட்டு, பாம்பன் உள்ளிட்ட இடங்களில் மீன் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக, சீலா மீன் கிலோ ரூ.1,400-க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி