முரசு புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் ஆந்திர காவல்துறையால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை மீட்க வேண்டும் என வலியுறுத்தி காசிமேடு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4-து நாளாக தொடரும் இந்த போராட்டத்தால், சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் காசிமேடு மீன் சந்தை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
நன்றி:SunNews