பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க மீனவர்கள் எதிர்ப்பு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஆலோசனை நடத்திய மீனவ சங்க பிரதிநிதிகள், திட்டத்தை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர். மக்களின் கருத்தை கேட்காமல் திட்டத்தை கொண்டு வருவது ஆபத்தானது என்றும், இதனால் மீனவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினர். ஏற்கெனவே லூப் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளதாக சுட்டிக்காட்டினர்.

தொடர்புடைய செய்தி

✕
✕