மீன்களின் விலை கிடுகிடு உயர்வு

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் கடந்த 15ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வார விடுமுறை, ஈஸ்டர் பண்டிகையையொட்டி மீன் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வஞ்சரம் மீன் ஒரு கிலோ ரூ.1,200 - ரூ.1,500 வரையும், இறால் ரூ.500, பாறை ரூ.600, மத்தி ரூ.250 என்ற விலைகளில் விற்கப்படுகிறது. டேம் மீன்களின் விலை சிறிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கட்லா, ரோகு, பாறை உள்ளிட்ட மீன்களின் விலை ரூ.20-40 வரை வரை உயர்ந்துள்ளன. 

சிக்கன் - ரூ.240
மட்டன் - ரூ.800

தொடர்புடைய செய்தி