கடந்த வாரத்தை போன்று இந்த வாரமும் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்து அசைவ பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, காசிமேட்டில் முதல் தர வஞ்சிரம் கிலோ ரூ.2,500-க்கும், கொடுவா ரூ.800-க்கும் விற்பனையாகிறது. பால் சுறா, சீலா, சங்கரா மீன் கிலோ தலா ரூ.600, பாறை ரூ.800, நெத்திலி ரூ.400, நண்டு ரூ.600, பண்ணா ரூ.500 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடலூர், நாகை, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலும் மீன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
நன்றி: சன் நியூஸ்