இந்திய விமானப்படையில் ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த் புதிய வரலாறு படைத்துள்ளார். குவாலியரில் உள்ள தந்திரோபாய மற்றும் வான்வழிப் போர்முறை மேம்பாட்டு நிறுவனத்தில் (TACDE) நடத்தப்பட்ட ‘போர் விமானப் படைத் தலைவர்’ (FCL) பயிற்சியை நிறைவு செய்த முதல் பெண் போர் விமானி என்ற பெருமையை பெற்றுள்ளார். 20 வாரங்கள் நடைபெற்ற இந்த மேம்பட்ட பயிற்சியில், சிக்கலான வான்வழிப் போர் உத்திகளை கற்ற அவர், இந்திய விமானப்படையின் உயர்தர போர் உத்தி நிபுணர்கள் குழுவில் இணைந்துள்ளார்.