தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிப்.20 முதல் மார்ச் 2ஆம் வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தொகுதிக்கு ரூ.25,000, மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு ரூ.15,000 விருப்ப மனு கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் விருப்ப மனுக்கள் வழங்கி வருகின்றனர். முன்னதாக, அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்கள் வழங்கின.
நன்றி: NewsTamilTV24x7