ஈரானின் லாமெர்ட் நகர் மீது அமெரிக்கா முதன்முறையாக 3 ஏவுகணைகளை செலுத்தியதில், 7 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியாகினர். ஏவுகணை தாக்கிய பகுதியிலிருந்து 50 மீட்டர் தொலைவில் உள்ள மக்களும் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் 3 மடங்கு தொலைவிலான பகுதிகளிலும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இந்த ஏவுகணையானது, நீண்ட தொலைவு இலக்கை, துல்லியத்துடன் தாக்கும் தன்மை கொண்டது என்றும் ஏர்வார்ஸ் அமைப்பும் பாதுகாப்பு நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.