முதலாவது ஒருநாள் போட்டி: இந்திய அணிக்கு 186 ரன்கள் இலக்கு

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடந்துவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சால் நிலைகுலைந்த நியூசிலாந்து அணி 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் 4, குர்னூர் பிரார் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நிலையில், 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்ய ஆயத்தமாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி

✕
✕