செல்போன் பயனர்கள் எளிதாகத் தேர்வு செய்யும் வகையில், 30 நாள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் வாய்ஸ் & எஸ்எம்எஸ் (Voice & SMS) ரீசார்ஜ்களை 'TRAI Mandated Packs' என்ற தலைப்பில் தங்களது ஆப் மற்றும் இணையதளத்தின் முதல் வரிசையிலேயே காட்சிப்படுத்த வேண்டும் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் (TRAI) உத்தரவிட்டுள்ளது. நுகர்வோருக்குக் கூடுதல் தெரிவுகளை வழங்கும் நோக்கில் கடந்த 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த நடைமுறையை உடனடியாகச் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.