பிரான்சில் முதன்முறையாக மனிதருக்கு ஷமோண்டா வைரஸ் பாதிப்பு

பிரான்சில் மனிதருக்கு ஷமோண்டா வைரஸ் பரவியுள்ள முதல் சம்பவம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் கிழக்கு பிரான்சில் ஈக்களின் கடி மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்த நோயாளிக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு, நரம்பியல் தொடர்பான சிக்கல்களுடன் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். பொதுவாக ஆடு, மாடு போன்ற கால்நடைகளை மட்டுமே தாக்கும் என நம்பப்பட்டு வந்த இந்த வைரஸ், தற்போது மனிதர்களை தாக்கியிருப்பது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕