செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் கிடைத்த முதல் துப்பு

செஞ்சி சிறுமி வழக்கில் மூதாட்டி வாக்குமூலம் அளித்துள்ளார். சிறுமி வீட்டின் அருகே வயல்வெளியில் தனியாக வசித்து வரும் அந்த மூதாட்டி, சிறுமி காணாமல்போன அன்று அதிகாலையில் மர்மநபர் ஒருவர் தனது வீட்டுக் கதவை மூன்று முறை தட்டியதாகவும், பயத்தால் தான் கதவைத் திறக்கவில்லை என்றும் கூறியுள்ளார். சிறுமி மாயமான அதே நேரத்தில் மூதாட்டியின் வீட்டுக் கதவைத் தட்டிய மர்ம நபர் யார் என்பது குறித்தும், இதற்கும் சிறுமி மாயமானதற்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி

✕
✕