தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண்ணை தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டனர். மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண், தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்றபோது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பெண்ணை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
நன்றி: பாலிமர்