வீட்டில் பட்டாசு வெடித்து விபத்து - ஒருவர் பலி

மதுரை மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியில், தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த பட்டாசுகள் எதிர்பாராதவிதமாக வெடித்ததில், வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த லோகேஷ், மனோஜ் மற்றும் யோகவனி ஆகியோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மனோஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொட்டாம்பட்டி காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: ஜனம்

தொடர்புடைய செய்தி

✕
✕