ரயில்வே தண்டவாளத்தில் தீ விபத்து: 5 ரயில்கள் நிறுத்தம்

அரக்கோணம் - சென்னை ரயில் மார்க்கத்தில் புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே நேற்று (டிச., 25) உயர் மின்னழுத்த மின் கம்பியில் தீ விபத்து ஏற்பட்டது. காக்கைகள் உட்கார்ந்ததால் கம்பிகள் உரசியதில் தீ பரவியதாக ரயில்வே உயர் மின்னழுத்த மின்பிரிவு பொறியாளர்கள் தெரிவித்தனர். இதனால் 5 மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டன. ரயில்வே பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து, பழுதடைந்த கம்பிகளை மாற்றிய பின் ரயில்கள் மீண்டும் இயக்க அனுமதிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி