மேற்கு வங்கத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள கட்வா ரயில் நிலையத்தில் இன்று (பிப்.15) அதிகாலை நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலில் தீவிபத்து ஏற்பட்டது. அதிகாலை சுமார் 4.30 மணியளவில், கட்வா இயில் நிலையத்தின் 2ஆவது நடைமேடையில் நின்று கொண்டிருந்த கட்வா - அசிம்கஞ்ச் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியில் தீப்பிடித்தது. தீ பரவுவதைத் தடுக்க இயில்வே ஊழியர்கள் உடனடியாக அந்தப் பெட்டியை ரயிலின் மற்ற பெட்டிகளில் பிரித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.