டெல்லி மத்திய செயலக கட்டடத்தில் தீ விபத்து

டெல்லி: ஜன்பத் சாலையில் உள்ள டெல்லியின் பொது மத்திய செயலக (CCS) கட்டடத்தில், எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 13 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தில் யாரேனும் சிக்கியுள்ளனரா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

நன்றி: TeluguScribe

தொடர்புடைய செய்தி