பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 நோயாளிகள் உயிரிழந்தனர். மருத்துவமனையின் ஒரு பகுதியில் தீ வேகமாக பரவியதால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் பணியாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.