சென்னையில் தீ விபத்து.. 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் நாசம்

சென்னை பூவிருந்தவல்லி சென்னீர்குப்பம் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயில் கருகியதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்ற வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மர்மநபர்கள் தீ வைத்தனரா? அல்லது மின்மாற்றியில் இருந்து விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி