கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிரே வந்த பைக் மீது தனியார் நிறுவன பேருந்து மோதியது. இதில், பேருந்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர சம்பவத்தில், பைக்கில் சென்ற தனுஷ் என்ற இளைஞர் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்க முயன்ற போதும், பேருந்து முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.
நன்றி: NewsTamilTV24x7