மிட்டாய் தொழிற்சாலையில் தீ விபத்து : 3 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் செராங் மாவட்டத்தில் உள்ள 'மில்கிட்டா' மிட்டாய் தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று (நவ.21) ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மாயமான 36 தொழிலாளர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 12 மணி நேரத்திற்கும் மேலாகத் தீ எரிந்து வருவதால், தீயணைப்பு வீரர்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் இணைந்து தீயை அணைக்கும் பணியிலும், சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி

✕
✕